மேற்பனைக்காடு கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்
மேற்பனைக்காடு கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் புயல் பாதிப்பிற்காக அரசு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் 2,300 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில், சுமார் 1100 பேருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதால் நிவாரணம் கிடைக்காத பொதுமக்கள் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் மேற்பனைக்காடு கிராமத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விடுபட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால் அதை ஏற்காத மக்கள் பல முறை மனு கொடுத்துவிட்டோம். இனியும் செலவு செய்து மனு கொடுக்க முடியாது. குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரண பொருளும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகையும் வழங்க வேண்டும். மேலும் இதுவரை நிவாரணம் கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் மற்றும் நிவாரணம் வழங்கப்பட உள்ளவர்களின் பட்டியலை கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்ட வேண்டும். அப்போது தான் முறைகேடுகளை தடுக்க முடியும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
அப்போது தாசில்தாரிடம் பேசிய எம்.எல்.ஏ. மெய்யநாதன், அரசு நிவாரணத்தில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. கூரை வீடு, ஓட்டு வீடு, மட்டுமின்றி கான்கிரீட் வீடுகளும், காலனி வீடுகளும் சேதமடைந்துள்ளது. ஆனால் கான்கிரீட் வீடு, காலனி வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படுவதில்லை. அருகில் உள்ள ஆலங்குடி தாலுகாவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அறந்தாங்கி தாலுகாவில் மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுவதாக கூறினார்.
மேற்பனைக்காடு கிராமத்தில் சாலை மறியல் நடக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் மேற் பனைக்காடு செல்லும் ஒரு சில அரசு நகர பஸ்கள் கீரமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டது. அதனால் அந்த பஸ்சில் சென்ற பயணிகளும், மேற் பனைக்காடு செல்ல கீரமங்கலத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்களும் 5 கி.மீ. தூரம் வரை நடந்து சென்றனர்.

Related Tags :
Next Story