நிவாரண பொருட்கள் வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 40 பேர் கைது
நிவாரண பொருட்கள் வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அதற்கான கணக்கெடுக்கும் பணிகள் முடிந்து நிவாரண பணிகள் தொடங்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்க வில்லை என்று கூறி பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதேபோல் கந்தர்வகோட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட எல்லா கிராம மக்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அரசப்பன், நகர செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
40 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து அங்கு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுவித்தனர். இதுபோல கந்தர்வகோட்டை அருகில் உள்ள சுந்தம்பட்டியில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story