ஆரல்வாய்மொழியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஆரல்வாய்மொழியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:00 AM IST (Updated: 1 Jan 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அகற்ற கோரி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி சந்திப்பில் கால்வாய் குறுக்கே இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட மண் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், விபத்து ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.

இந்தநிலையில், சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அகற்ற கோரி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் கவுன்சிலர்கள் சதீஷ்குமார், தாணுபிள்ளை, இலக்கிய அணி அமைப்பாளர் சேதுவேல், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story