அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் பணியாற்றும் வகையில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும். இரவு காவலரை நியமிக்க வேண்டும்.
பிரேத பரிசோதனை அறைக்கு குளிர் சாதன வசதி செய்துதர வேண்டும். பிரேத பரிசோதனை செய்ய நிரந்தரமாக உதவியாளரை நியமிக்க வேண்டும்.
நாய்க்கடிக்கான மருந்து பொருளை எந்த நேரமும் இருப்பில் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் காந்தி தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவக்குமார், மாதர் சங்க நிர்வாகிகள் கலைச்செல்வி, சந்திரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சம்சுதீன், சிவசாமி, முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story