சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து சாமிநாதன் எம்.எல்.ஏ. திடீர் தர்ணா; பிளாஸ்டிக்கை தடை செய்யக் கோரிக்கை
பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து சாமிநாதன் எம்.எல்.ஏ. திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி,
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுவையில் 50 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கனவே தடையிருந்தும் அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. தமிழகத்தைப்போல் புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கவேண்டும் என்று பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை சட்டசபைக்கு வந்த அவர் சட்டமன்ற கூட்ட அரங்கிற்கு செல்லும் படிக்கட்டில் அமர்ந்து திடீர் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பிளாஸ்டிக்கை தடை செய்யும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் பிடித்தபடி அமர்ந்திருந்தார். அவருடைய இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்-அமைச்சரின் செயலாளர் பார்த்திபன் அழைப்பு விடுத்தார். அதன்பேரில் அவரது அலுவலகத்துக்கு சென்ற சாமிநாதன் எம்.எல்.ஏ.விடம், செயலாளர் பார்த்திபன், நாளை (புதன்கிழமை) அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அரசு இந்த பிரச்சினை தொடர்பாக முடிவெடுக்க உள்ளது என்று கூறினார்.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாமிநாதன் எம்.எல்.ஏ. தனது போராட்டத்தை வாபஸ்பெற்றார். பிளாஸ்டிக் தடை தொடர்பான அவரது போராட்டம் ஒரு சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.

Related Tags :
Next Story