ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலினால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலினால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 31 Dec 2018 11:45 PM GMT (Updated: 31 Dec 2018 10:45 PM GMT)

ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலினால் தமிழக த்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று காரைக்காலில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத் திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வருகை தந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என பல அரசியல் கட்சிகள் நாகரீகம் இல்லாமல் கூறு வருகின்றனர். ஆனால் நான் சொல்கிறேன், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் யாரும் எதிர்பாராத, எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியை விட வலுவான கூட்டணியை நாங்கள் அமைப்போம். எது எப்படி இருந்தாலும், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து பா.ஜ.க. சார்பில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை செல்வார்கள்.

தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். நிச்சயமாக ராகுல்காந்தி, சோனியா, மு.க. ஸ்டாலினால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற ஆண்டும் பிரதமர் மோடியின் ஆண்டு தான் என்பது எங்களுடைய தாரக மந்திரமாக இருக்கும். ஏனென்றால், பா.ஜ.க. ஆட்சி இந்தியா முழுவதும் நல்ல திட்டங்களை வழங்கி வருவதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி என எந்த மாநிலத்தையும் மாற்றாந்தாய் மனப் பான்மையோடு மத்திய அரசு நடத்தவில்லை. புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூட உச்சநீதிமன்றம் மத்திய அரசு நியமித்த நியமன எம்.எல்.ஏ.,க்களின் பதவி செல்லும் என நியாயமான தீர்ப்பை கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சிதான் புதுச்சேரியில் மற்ற கட்சிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்து கிறது. புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி பா.ஜ.க. முகவர்போல செயல்படுவதாக பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அது தவறானது. அவர் வந்த பின்புதான் மக்களுக்கு எல்லா திட்டங்களும் நியாயப்படி கிடைக்கிறது. புதுச்சேரி கவர்னர் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள கவர்னர்களும் அவர்கள் எல்லையை மீறாமல் நியாயப்படிதான் நடந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story