டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டபோது தீ விபத்து; 2 தொழிலாளர்கள் படுகாயம்
அந்தியூர் அருகே டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டபோது தீ விபத்து ஏற்பட்டு 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவு துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அங்கு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களான சங்கராபாளையத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 50), அருணாச்சலம் (48) ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story