நிவாரண பொருட்கள் கேட்டு திருவரங்குளத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்


நிவாரண பொருட்கள் கேட்டு திருவரங்குளத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:30 AM IST (Updated: 4 Jan 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

நிவாரண பொருட்கள் கேட்டு திருவரங்குளத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. மேலும் பொதுமக்கள் வீடுகளை இழந்து, உணவுக்கு வழியில்லாமல் தவித்து வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சியை சேர்ந்த தோப்புக்கொல்லை கிராமத்தில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தோப்புக்கொல்லை பொதுமக்கள் புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வல்லத்திரா கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் காயாம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறி திருவரங்குளம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருவரங்குளம் கடைவீதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story