முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை


முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Jan 2019 4:15 AM IST (Updated: 4 Jan 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை நேற்று காலை மாணவர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

திருச்சி,

திருச்சி காஜாமியான் அரசு உதவி பெறும் பள்ளியில், சத்துணவு பொருட்களை கையாடல் செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை நேற்று காலை மாணவர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் அங்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கல்வித்துறை அதிகாரிகளும் வந்து பேசினார்கள். இதையடுத்து மாணவர்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து புகார் அளித்தனர். அந்த கோரிக்கைகளின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story