வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2019 4:15 AM IST (Updated: 4 Jan 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2015-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2015-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். செயலாளர் கலையரசி முன்னிலை வகித்தார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், எல்லா செவிலியர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்க வேண்டும், ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் மார்கரெட், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் லட்சுமணன், வளனரசு, மோகன் ஆகியோர் பேசினார்கள். 

Next Story