உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
உசிலம்பட்டி பகுதியில் உற்பத்தி அதிகரிப்பால் பருத்தி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே கொள்முதல் நிலையம் அமைத்து அரசே பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி, எழுமலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பொய்த்து வருவதால் நெல், கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்ய போதிய தண்ணீர் இல்லை. கடந்த 6 ஆண்டுகளாகவே பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் இந்த பகுதியில் உள்ள கண்மாய், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. மழையின்றி விவசாய கிணறுகளிலும் தண்ணீர் வற்றியதுடன் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. எனவே இந்த பகுதி விவசாயிகள் பருவமழையை நம்பி மானாவாரி பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். இந்த வருடம் மானாவாரி பருத்திக்கும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இருப்பினும் பருவமழை காலத்தில் பெய்த மழையால் ஓரளவிற்கு பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கொடுத்துள்ளது.
ஆனால் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக பருத்திக்கு போதிய விலை கிடைக்காமல் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.48ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.37ஆக விலை குறைந்தது. விவசாயிகள் பாடுபட்டு உற்பத்தி செய்யும் பருத்திக்கு விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்வதில்லை. மாறாக இடைத்தரகர்களும், வியாபாரிகளும் தான் நிர்ணயம் செய்கின்றனர். இதனால் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கும், கஷ்டத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.
ஏற்கனவே தொடர்ந்து பொய்த்து வரும் பருவமழையினால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் வேலைக்கு சென்று விட்டனர். எஞ்சியுள்ள விவசாயிகள் எங்கு போவது என்று வழி தெரியாமல் குறைந்த அளவு பெய்யும் மழையை வைத்து மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து தங்களுடைய பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விளைவிக்கும் பருத்திக்கு போதிய விலை கிடைக்கவிடாமல் இடைத்தரகர்களும், வியாபாரிகளும் முட்டுக்கட்டை போட்டு குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இதனால் சில நேரங்களில் பருத்தி எடுக்கும் கூலித் தொழிலாளிக்குகூட கூலி கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி விடுகிறது.
பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க அரசு நெல்லிற்கு கொள்முதல் நிலையம் அமைத்தது போல் பருத்திக்கும் அரசு கொள்முதல் நிலையம் அமைத்து பருத்தியை அரசே வாங்கினால் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நஷ்டத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதே விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. எனவே பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு பருத்தி கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

Related Tags :
Next Story