சத்தியில் தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல் 2 மூதாட்டிகள் உயிர் தப்பினர்


சத்தியில் தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல் 2 மூதாட்டிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் நடந்த தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல் ஆனது. இதில் 2 மூதாட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் ரோட்டரி கிளப் பின்புறம் உள்ள பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜன். இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டு. அவருடைய தாய் வள்ளியம்மாள் (75), அக்கா சரஸ்வதி (60. இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுந்தர்ராஜன் வெளியில் சென்றுவிட்டார். சரஸ்வதியும், வள்ளியம்மாளும் வீட்டில் இருந்து டி.வி. பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வீட்டில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் 2பேரும் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று 2 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் சரஸ்வதியும், வள்ளியம்மாளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீடு எரிந்த சாம்பல் ஆனது. வீட்டில் இருந்த 1 பவுன் நகை, பணம், பத்திரம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

மின்கசிவே தீ விபத்துக்கான காரணம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story