பிளக்ஸ் போர்டை அகற்ற முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கல்வீச்சு; 7 பெண்கள் உள்பட 13 பேர் மீது வழக்கு


பிளக்ஸ் போர்டை அகற்ற முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கல்வீச்சு; 7 பெண்கள் உள்பட 13 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Jan 2019 11:12 PM GMT (Updated: 4 Jan 2019 11:12 PM GMT)

பரமக்குடி அருகே பிளக்ஸ் போர்டை அகற்ற முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கல்வீசி தாக்கிய 7 பெண்கள் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள அருங்குளம் கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஒரு தரப்பினர் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா அங்கு சென்று சம்பந்தப்பட்ட பிளக்ஸ் போர்டை அகற்றியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த ரவி மனைவி பூரணம், குப்பு மனைவி வள்ளி, வெள்ளைச்சாமி மனைவி சித்ரா, தனுஷ்கொடி மனைவி ராக்கு, போஸ் மனைவி முத்துலெட்சுமி, சந்திரன் மனைவி சுமதி, சண்முகம் மனைவி நாகராணி உள்பட அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அவரை அவதூறாக பேசி கற்களை வீசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அமுதா கொடுத்த புகாரின் பேரின் 7 பெண்கள் உள்பட 13 பேர் மீது பார்த்திபனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story