பளுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை வேலை கேட்டு மனு


பளுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை வேலை கேட்டு மனு
x
தினத்தந்தி 5 Jan 2019 4:44 AM IST (Updated: 5 Jan 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாற்றுத்திறனாளி பெண் ராமநாதபுரத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலெக்டரிடம் மனுகொடுத்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் ‌ஷர்மிளா (வயது 24). மாற்றுத்திறனாளியான இவர் எம்.பில், பி.எட். படித்துள்ளார். இவர் சென்னையில் தமிழ்நாடு பாரா விளையாட்டு கழகத்தின் சார்பில் கடந்த மாதம் 26–ந்தேதி நடத்தப்பட்ட மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 79 கிலோ பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதுதவிர கடந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் குண்டு எறிதல், ஈட்டி எறிதலில் முதலிடமும், வட்டு எறிதலில் 3–ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி வீராங்கனையான இவர் நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டார். அப்போது மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவை சந்தித்து தனக்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு கோரி மனு கொடுத்தார். அவருடைய மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தார்.


Next Story