மதுரை விமான நிலையத்தில் கவர்னர்– பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு


மதுரை விமான நிலையத்தில் கவர்னர்– பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 6 Jan 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் கவர்னர்– பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவரை ஒருவர் சந்தித்து கைகுலுக்கி சிறிது நேரம் பேசிக்கொண்டனர்.

மதுரை,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று மதியம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து கைகுலுக்கி சிறிது நேரம் பேசிக்கொண்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Next Story