நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பும் புதுவை விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கவேண்டும்; அமைச்சர்களிடம் கோரிக்கை மனு

நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பும் புதுவை விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கவேண்டும்; அமைச்சர்களிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 6 Jan 2019 3:45 AM IST (Updated: 6 Jan 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலம் அரியூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் முருகையன், செயலாளர் ரவி மற்றும் சங்கத்தினர் தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

கண்டமங்கலம்,

அந்த மனுவில், புதுவை மாநிலம் அரியூர் மற்றும் லிங்காரெட்டிபாளையத்தில் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த இரண்டு ஆலைகளும் இயங்காததால் இங்கு கரும்பு பயிர் செய்த விவசாயிகள் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பி வருகின்றனர். எனவே நெல்லிக்குப்பம் ஆலைக்கு கரும்பு அனுப்பும் புதுவை விவசாயிகளுக்கும் தமிழக விவசாயிகளுக்கு வழக்குவதுபோல்ம் டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.200 வழங்கவேண்டும் என்று கூறியிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சம்பத், வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இதுபற்றி பரிசீலனை செய்வதாக கூறினர்.

Next Story