மாவட்ட செய்திகள்

வேலூரில் விடிய விடிய வாட்டி எடுக்கும் குளிரால் பொதுமக்கள் கடும் அவதி + "||" + In Vellore dawn gets cold Civilian people are suffering

வேலூரில் விடிய விடிய வாட்டி எடுக்கும் குளிரால் பொதுமக்கள் கடும் அவதி

வேலூரில் விடிய விடிய வாட்டி எடுக்கும் குளிரால் பொதுமக்கள் கடும் அவதி
வேலூரில் விடிய விடிய வாட்டி எடுக்கும் குளிரால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட நேர்ந்துள்ளது.
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே வேலூரில்தான் வெயிலின் அளவு அதிகமாக காணப்படும். சாதாரணமாக 105 டிகிரி முதல் 110 டிகிரி வரை வெயில் கொளுத்தும். அதேபோல் குளிர் காலத்தில் கடுங்குளிரும், பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும்.


இந்த ஆண்டு வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஊட்டி, கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையே வேலூரிலும் காணப்படுகிறது. இரவு நேரங்களில் கடுங்குளிரால் உடல் நடுங்குகிறது. பகலில் கூட உடல் விறைத்துப் போகும் அளவிற்கு குளிர்ந்த காற்று வீசுகிறது. காலை 9 மணி வரை குளிரின் தாக்கம் இருக்கிறது.

இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. மதிய வேளையில் குடிநீர் குழாயை திறந்தால் கூட தண்ணீர் ஜில்லென்று வருகிறது. காலையில் வெளியில் வரும் பொதுமக்கள் ஸ்வெட்டர், குல்லாய், மப்ளர், கம்பளி ஆகியவற்றை அணிந்தும் சால்வையைபோர்த்திக்கொண்டும் தான் வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொளுத்தி அதில் குளிர் காய்கின்றனர்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்கை எரிய விட்டு மெதுவாக செல்கின்றன. மாலை 7 மணிக்கே குளிரின் தாக்கம் தொடங்கி விடுகிறது.

குளிரின் காரணமாக ஸ்வெட்டர், குல்லா, கோட் போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. வேலூர் கோட்டை மைதானம், அண்ணா கலையரங்க பகுதியில் தற்காலிக ஸ்வெட்டர் கடைகளில் இவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. கடுங்குளிரினால் வேலூர் மாநகர பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலூரில் உதவி சிறைக்காவலர்களுக்கான தேர்வு - 306 பேர் எழுதினர்
வேலூர் ஊரீசு கல்லூரியில் நடந்த உதவி சிறைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வை 306 பேர் எழுதினர்.
2. வேலூர்: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
வேலூர் வாலாஜாப்பேட்டை சுங்கசாவடி அருகே நடைபெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
3. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் டி.ஐ.ஜி. வனிதா உத்தரவு
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளார்கள்.
4. வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் - அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் எச்சரிக்கை
வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் காணப்பட்டதால் ஜெயில் அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்தார்.
5. மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள் உடைத்து அகற்றம் - நவீன கருவி மூலம் நடவடிக்கை
வேலூர் காகிதப்பட்டறை மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகளை நவீன கருவி மூலம் உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...