ரெயில்வே பாதுகாப்பு படையில் 798 பணிகள்
ரெயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 798 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
ரெயில்வே பாதுகாப்பு படை சுருக்கமாக ஆர்.பி.எப். என அழைக்கப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை என்ற மற்றொரு பிரிவும் இதனுடன் இணைந்து செயல்படுகிறது. தற்போது இந்த இரு பிரிவுகளிலும் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. டெய்லர், முடிதிருத்துனர் உள்பட பல்வேறு பிரிவுகளில் பணிகள் உள்ளன. அதிகபட்சமாக வாட்டர் கேரியர் பணிக்கு 452 இடங்களும், சபாய் வாலா பணிக்கு 199 இடங்களும், சலவையாள் மற்றும் முடி திருத்துனர் பணிக்கு தலா 49 இடங்களும் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந் தேதியில் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) படித்திருக்க வேண்டும்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. இந்த கட்டணத்தில் ரூ.400 கணினி தேர்வின்போது திரும்ப வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250 திரும்ப வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://indianrailways.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Related Tags :
Next Story