பாரபட்சம் இன்றி புயல் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாரபட்சம் இன்றி புயல் நிவாரணம் வழங்கக்கோரி வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேதாரண்யம் ஒன்றிய குழு சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார்.
கஜா புயலால் பாதிக்கப்்பட்ட மாடி வீடு, ஓட்டு வீடு, கூரை வீடுகளுக்கு பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர், சவுக்கு ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் காங்கிரீட் வீடு கட்டிகொடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர் நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாரியப்பன், மாதர் சங்க உரிமை செயலாளர் ஜெயா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், அகில இந்திய இளைஞர் அமைப்பு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story