கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் சாலை மறியல் போராட்டம்; விவசாயிகள் சங்கம் முடிவு


கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் சாலை மறியல் போராட்டம்; விவசாயிகள் சங்கம் முடிவு
x
தினத்தந்தி 7 Jan 2019 10:55 PM GMT (Updated: 7 Jan 2019 10:55 PM GMT)

சிவங்கை மாவட்ட விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி 2 நாட்கள் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சிவகங்கை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டம் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் முத்துராமன், மாவட்ட பொருளாளர் வீரபாண்டி, மாவட்ட துணைத்தலைவர் ஜோதிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காளையார்கோயில் ஒன்றிய செயலாளர் ஜோதிநாதன், ஒன்றிய தலைவர் சத்தியராஜ், ஒன்றிய பொருளாளர் முத்துராஜா, இளையான்குடி ஒன்றிய செயலாளர் நாகசாமி, ஒன்றிய தலைவர் சந்தியாகு, தேவகோட்டை ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் சகதிவேல் உள்பட பலர் கொண்டனர்.

கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாய பகுதியில் 100 சதவீதம் விவசாயம் பாதிப்பட்டது. இதன் காரணமாக முழு நிவாரண தொகை வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணம் ரூ.25ஆயிரம் வழங்க வேண்டும்.

மேலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) திருப்பத்தூரிலும், நாளை (புதன்கிழமை) காளையார்கோவிலும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story