புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி வேளாங்கண்ணியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு கீழையூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ், மாவட்ட பிரதிநிதிகள் இளபழனியப்பன், மாரிமுத்து, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மலர்மண்ணன், மாவட்ட பிரதிநிதி இளம்பரிதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் வேளாங்கண்ணியில் உள்ள நெடுஞ்சாலைதுறை மற்றும் பேரூராட்சி சாலையை உடனே சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும்.
அனைத்து தெருக்களில் உள்ள தெருவிளக்கு மற்றும் உயர்கோபுர மின்விளக்குகளை பழுதுநீக்கம் செய்ய வேண்டும். வேளாங்கண்ணி கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாங் கண்ணி பகுதியில் உள்ள அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பழுதுபார்த்து குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story