திருபுவனை, வில்லியனூரில் கடைகள் மூடல்; மறியலில் ஈடுபட்ட 210 பேர் கைது
திருபுவனை, வில்லியனூர் உள்ளிட்ட புறநகர் பகுதியில் கடைகள் மூடப்பட்டன. திடீர் மறியலில் ஈடுபட்ட 210 பேரை போலீசார் கைது செய்தனர். பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.
திருபுவனை,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி மாநிலத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அரியாங்குப்பம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. காய்கறி, மீன் மார்க்கெட் திறக்கப்பட்டு இருந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வகையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் முழு அடைப்பு காரணமாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறுதல், வீடு மற்றும் குடிநீர் வரி செலுத்துதல் உள்ளிட்ட அலுவலக பணிகள் பெரிதும் தடைபட்டது.
அரசு, தனியார் பஸ்கள் ஓடாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அரியாங்குப்பம்-கடலூர் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
சுற்றுலா தலமான நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் மூடப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருக்கனூர், காட்டேரிக்குப்பம் ஆகிய பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. சில தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கின.
திருபுவனையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தனியார் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. திருபுவனை கூட்டுறவு நூற்பாலை வழக்கம்போல் செயல்பட்டது.
மதகடிப்பட்டு சந்திப்பில் செவ்வாய்க்கிழமை தோறும் கூடும் வார சந்தை நேற்று வழக்கம்போல் இயங்கியது. சாலையோரத்தில் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவற்றை வாங்கிச் சென்றனர். திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
அப்போது அங்கு கூடாரம் அமைத்து தங்கி இருந்த நரிக் குறவர்கள் கடைபோட எதிர்ப்பு தெரிவித்து போலீசார், வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
திருக்கனூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. தவளக்குப்பம் பகுதியில் கடைகள் திறந்திருந்தன. பாகூரில் இருந்து மணமேடு, கரையாம்புத்தூர் உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை.
போராட்டத்தையொட்டி பாகூர் மாடவீதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையொட்டி 17 பெண்கள் உள்பட 67 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததால் வில்லியனூர் - விழுப்புரம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. வில்லியனூர் புறவழிச்சாலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 5 பெண்கள் உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூரை அடுத்த ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம் பகுதியில் பெரும்பாலான கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு இருந்தன. புறநகர் பகுதி முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மதகடிப்பட்டு சந்திப்பு காமராஜர் நினைவு தூண் அருகே இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் திருபுவனை போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. தவளக்குப்பம் பகுதியில் கடைகள் திறந்திருந்தன. பாகூரில் இருந்து மணமேடு, கரையாம்புத்தூர் உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை.
போராட்டத்தையொட்டி பாகூர் மாடவீதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையொட்டி 17 பெண்கள் உள்பட 67 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததால் வில்லியனூர் - விழுப்புரம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. வில்லியனூர் புறவழிச்சாலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 5 பெண்கள் உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூரை அடுத்த ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம் பகுதியில் பெரும்பாலான கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு இருந்தன. புறநகர் பகுதி முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story