மாவட்ட செய்திகள்

குளச்சல் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Army soldier near Kouchel's home jewelry - police looting for the mystery of money laundering

குளச்சல் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

குளச்சல் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குளச்சல் அருகே ராணுவவீரர் வீட்டில் 2½ பவுன் நகை– பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
குளச்சல்,

குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் எட்வர்சன் (வயது 50). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலா(42). இவரது தாயார் வீடு, குளச்சலை அடுத்த கோணம்காடு பகுதியில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் கலா, கோணம்காட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார்.  


இந்தநிலையில் நேற்று காலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும், அங்கு பீரோவில் இருந்த 2½ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருந்தது. வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.  கைரேகை நிபுணர்கள்அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது. இதுதவிர 312 பவுன் நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
2. பட்டத்தரசி அம்மன் கோவிலில் சிலை திருட்டு: மேலும் ஒருவர் கைது 4-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலை உடைத்து சிலை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரை 4-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
3. கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு: கைது செய்யப்பட்டவர், கோர்ட்டில் ஆஜர் 28–ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
கோவை அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலையை திருடியதாக கைது செய்யப்பட்டவர், கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 28–ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
4. வங்கி அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மார்த்தாண்டம் அருகே தனியார் வங்கி அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் பறித்த மர்மநபர்கள் தப்பி விட்டனர்.
5. கம்பத்தில், தனியார் பள்ளியில் பணம், கண்காணிப்பு கேமரா திருட்டு
கம்பத்தில் தனியார் பள்ளி அலுவலக பூட்டை உடைத்து பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா திருடி சென்ற மர்ம நபர் களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.