தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது
தொழிற்சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயமாக்கக்கூடாது. தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்தக்கூடாது. வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள மத்திய, மாநில அரசு தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யூ., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி. ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் தொழிற்சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அழகர்சாமி, எல்.பி.எப். செயலாளர் ரெங்கசாமி, எச்.எம்.எஸ். செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம், மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின்வாரிய பொறியாளர் சங்கம், சாலையோர வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டன.
அப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல அரியலூரில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தண்டபாணி, ஐ.என்.டி.யூ.சி., மாவட்ட தலைவர் தமிழ்மணி, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சிற்றம்பலம், எல்.பி.எப். மத்திய சங்க செயலாளர் பழனிசாமி, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் அந்தந்த தொழிற்சங்கத்தினர் நேற்று காலை மத்திய அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையம், அரசு சிமெண்டு தொழிற்சாலை ஆகியவற்றின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சாலை மறியல் செய்வதற்காக அவர்கள் அரியலூர் பஸ் நிலையத்திற்கு சென்ற போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்து அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மத்திய அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தபால்துறை அலுவலகங்கள் வெறிச்சோடின. ஒரு சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஊழியர்கள் பணிக்கு வராததால் பண பரிவர்த்தனை பணி பாதிக்கப்பட்டது. ஆனால், பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.

Related Tags :
Next Story