மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு + "||" + Tiruvallur district Ration card holders Pongal Gift

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள அக்கரப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக கன்னிகைபேர், திருநிலை, ஆமிதாநல்லூர், அக்கரப்பாக்கம், கிருஷ்ணாபுரம் கண்டிகை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி கன்னிகைபேர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு, கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.கே.எஸ். விஜயகுமார் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி பேசினார். இதில் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஆறுமுகம், கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு, கன்னிகை குமார், பல்லவாடா ரமேஷ் மற்றும் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், பாண்டறவேடு, கீச்சலம், பொதட்டூர்பேட்டை, பொம்மராஜுபேட்டை, குமாரராஜுப்பேட்டை, கொளத்தூர் போன்ற பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் திருத்தணி எம்.எல்.ஏ. நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட பால்வளத்துறை தலைவர் சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.டி. சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பிரியா சுரேஷ், பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜெயவேலு, துணைத்தலைவர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.