மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு வழங்காததை கண்டித்து கட்டுமாவடியில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு + "||" + Public road traffic pipeline affecting the Pongal Prize

பொங்கல் பரிசு வழங்காததை கண்டித்து கட்டுமாவடியில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பொங்கல் பரிசு வழங்காததை கண்டித்து கட்டுமாவடியில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
பொங்கல் பரிசு வழங்காததை கண்டித்து கட்டுமாவடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணமேல்குடி,

மணமேல்குடி அடுத்துள்ள கட்டுமாவடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதையடுத்து அங்குள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.ஆயிரம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. ஆயிரம் பாதி பேருக்கு வழங்கியும், பாதி பேருக்கு வழங்காமலும் உள்ளது. மேலும் அரசு அறிவித்துள்ள 25 கிலோ அரிசிக்கு பதிலாக 20 கிலோவும் மற்றும் சில ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் அரசு அறிவித்துள்ளதை விட குறைவாக வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கோபம் அடைந்தனர்.


இந்நிலையில் திடீரென பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கட்டுமாவடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (இன்று) பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. புயல் நிவாரணம் பாரபட்சமின்றி வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
புயல் நிவாரணம் பாரபட்சமின்றி வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. உப்பிலியபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
உப்பிலியபுரம் அருகே உள்ள வடக்குப்பட்டி கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. செங்கல்பட்டு திருத்தேரியில் சாலை, குடிநீர் வசதி கேட்டு தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு
செங்கல்பட்டு திருத்தேரியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
4. ஜாக்டோ–ஜியோவின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 25–ந்தேதி மறியல் போராட்டம்
ஜாக்டோ–ஜியோவின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வருகிற 25–ந்தேதி மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் 110 பேர் கைது
புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிக்கல் அருகே பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.