மாவட்ட செய்திகள்

விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு + "||" + Officials in the Vizhvam Film Running Theater

விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
விஸ்வாசம் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுக்கோட்டை,

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நேற்று வெளியாகியது. இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. புதுக்கோட்டையில் விஸ்வாசம் திரைப்படம் 2 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தியேட்டரில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமையில், தாசில்தார் பரணி, கிராம நிர்வாக அதிகாரி வசந்த்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தியேட்டரில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா?, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதல் நபர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்களா? கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகிறதா? என சோதனை செய்தனர். மேலும் படம் பார்க்க வந்தர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்களை சரிபார்த்தனர். அப்போது டிக்கெட்டில் எந்த தேதி, எத்தனை மணி காட்சி என குறிப்படவில்லை ஏன் என அதிகாரிகள் தியேட்டர் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.


தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த சோதனையில் தியேட்டரில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட கூடுதல் நபர்களை படம் பார்க்க அனுமதிக்கப்பட்டதும், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இது குறித்து கலெக்டரின் கணேஷின் ஆலோசனையை பெற்று சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு அபராதம் விதிக்கப் படும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆளில்லா குட்டி விமானம் மூலம் மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு
கும்பகோணம் அருகே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் தொல்லியல் துறை யினர் நேற்று ஆய்வை தொடங்கினர். இன்றும்(செவ்வாய்க் கிழமை) இந்த ஆய்வு தொடர்ந்து நடக்கிறது.
2. மணப்பாறை பஸ் நிலையத்தில் கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு மாணவ, மாணவிகள் திடீர் மறியல்
கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு மணப்பாறை பஸ்நிலையத்தில் மாணவ, மாணவிகள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு
வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4. பேட்டரி கார் வசதி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆய்வு
பஸ் நிறுத்தத்திலிருந்து உள்நோயாளிகள் பிரிவு வரை நோயாளிகளும், நடக்க இயலாதவர்களும் செல்வதற்காக இலவச பேட்டரி கார் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
5. வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் சிவராசு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.