மாவட்ட செய்திகள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும் - பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு + "||" + In the forthcoming parliamentary election, the DMK should strive to win more seats

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும் - பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும் - பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. கூறினார்.

வானூர்,

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வானூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தாங்கினார். வானூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முரளி வரவேற்றார்.

இந்த கூட்டதில் பொன்முடி பேசியதாவது:–

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. வானூர் சட்டமன்ற தொகுதியிலும் விரைவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின்போது ஊராட்சி செயலாளர்கள் அதிக அளவில் மக்களை திரட்டி வந்து ஊராட்சியின் அடிப்படை பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டும். மேலும் பெண்களையும் அதிக அளவில் இந்த கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை இந்த கூட்டத்தில் எடுத்துக்கூற வேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க.வை அதிக இடங்களில் வெற்றிபெறச் அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் வக்கீல் தமிழன் பிரசன்னா மற்றும் பலர் பேசினார்கள்.

கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ராஜு, கணேசன், கோட்டக்குப்பம் நகர தி.மு.க. செயலாளர் சண்முகம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயமூர்த்தி, துணை அமைப்பாளர் ராமதாஸ், திருச்சிற்றம்பலம் ஊராட்சி செயலாளர் சங்கர் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி: தி.மு.க.வுக்கு கூடுதலாக ஒரு மாநிலங்களவை எம்.பி.
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில், 13 தொகுதிகளை தி.மு.க., வென்றுள்ளது.
2. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நவாஸ்கனி வெற்றி தி.மு.க. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியிடம் அதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் வழங்கினார்.
3. ‘‘தி.மு.க. வெற்றி உண்மையானது அல்ல’’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
‘‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உண்மையானது அல்ல’’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
4. மானாமதுரை தொகுதியில் மீண்டும் தோல்வியை தழுவிய தி.மு.க.
மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து தி.மு.க. தோல்வியடைந்து வருவதால் கட்சியினர் மத்தியில் உற்சாகம் குறைந்து வருவதுடன், கவலையடைந்து வருகின்றனர்.
5. சேலம் நாடாளுமன்ற தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 20 பேர் டெபாசிட் இழந்தனர்
அ.தி.மு.க.விடம் இருந்த சேலம் நாடாளுமன்ற தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. இதில் அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 20 பேர் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.