மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாநகரில் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் + "||" + 2½ tons of plastic materials seized in Tirupur city

திருப்பூர் மாநகரில் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருப்பூர் மாநகரில் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பூர் மாநகரில் தடைவிதிக்கப்பட்ட 2½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையையும் மீறி பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனைசெய்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவின் பேரில் நேற்று திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஜவுளி கடைகள், பேக்கரி, டீக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறும்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று கடை வியாபாரிகள், வணிகர்கள், பேக்கரி, டீக்கடை, ஓட்டல் உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் பிளாஸ்டிக் பைகளை இருப்பு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஜவுளிக்கடைகளில் ‘நான் ஓவன்’ பிளாஸ்டிக் பைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பைகளை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளோம். அதன்பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். ஆய்வில் இந்த ‘நான் ஓவன்’ பைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜவுளிக்கடைக்காரர்கள் இந்த பைகளை தவிர்த்து காகிதம் மற்றும் கட்டை பைகளை பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளோம். மளிகை கடைக்காரர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள பாலித்தீன் பைகளை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களிடம் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. சாக்கு மூட்டைகளில் கடத்தி வந்த ரூ.11¼ லட்சம் போதைப்பொருள் லாரியுடன் பறிமுதல் பள்ளிகொண்டா அருகே பரபரப்பு
பள்ளிகொண்டாவில் சாக்கு மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட ரூ.11¼ லட்சம் மதிப்புடைய ‘மாவா’ எனும் போதைப்பொருள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
3. வாணியம்பாடி பகுதியில் அ.தி.மு.க.பிரமுகரிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்
வாணியம்பாடி அருகே பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் அ.தி.மு.க.பிரமுகரிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. ரூ.3 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
டாக்சியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடி வெளிநாட்டு பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வெளிநாட்டுக்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. பர்கூர் வனப்பகுதியில் பாறையில் கிடந்த நாட்டுத்துப்பாக்கி -5 மூட்டை மான் இறைச்சி பறிமுதல்; வேட்டையாடிய கும்பல் தப்பி ஓட்டம்
பர்கூர் வனப்பகுதியில் பாறையில் கிடந்த நாட்டுத்துப்பாக்கி-5 மூட்டை மான் இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தார்கள். ஆனால் வேட்டையாடிய கும்பல் தப்பி ஓடிவிட்டது.