திருச்செந்தூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது 28 பவுன் நகைகள் மீட்பு


திருச்செந்தூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது 28 பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 5:44 PM GMT)

திருச்செந்தூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 28 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் தலைமையில் போலீசார், நெல்லை சாலை இசக்கியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் கிங் காலனியை சேர்ந்த முருகன் மகன் முத்துபெருமாள் (வயது 22) என்பதும் அவர் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், வீரபாண்டியன்பட்டினம் பாத்திமா தெருவை சேர்ந்த மேகலா (45) என்பவரிடம் இருந்து 2½ பவுன் தங்க சங்கிலியும், குறிஞ்சி நகரை சேர்ந்த பிரேமா (58) என்பவரிடம் இருந்து 15 பவுன் தங்க சங்கிலியையும், வீரபாண்டியன்பட்டினம் ஜான் தெருவை சேர்ந்த ரோசி (37) என்பவரிடம் இருந்து 4½ பவுன் தங்க சங்கிலியையும் பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் சில பெண்களிடம் நகை பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து 28 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் முத்துபெருமாளை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story