மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை: சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் + "||" + Pongal Festive Season Vacation: Tourists gathered at the sunnambaru boat booth

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை: சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை: சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
பொங்கல் பண்டிகையையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அரியாங்குப்பம்,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15–ந் தேதி மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி 13–ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள், 14–ந் தேதி போகிப் பண்டிகை விடுமுறை தினம், 15–ந் தேதி பொங்கல் பண்டிகை, 16–ந் தேதி மாட்டுப் பொங்கல் விழா, 17–ந் தேதி திருவள்ளுவர் தினம் என மொத்தம் 5 நாட்கள் விடுமுறை நாளாக அமைந்துள்ளது.

இந்த தொடர் விடுமுறையை உற்சாகமாக அனுபவித்து மகிழ புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்துள்ளனர். குறிப்பாக அனைவரையும் கவரும் சுற்றுலா இடமாக திகழும் சுண்ணாம்பாறு படகு குழாமில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு பயணத்துக்கான டிக்கெட் எடுத்து படகு பயணம் மேற்கொண்டனர்.

நேற்றும் 2–வது நாளாக சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் சுண்ணாம்பாறு படகு குழாம் திணறியது. பயணிகளின் வருகைக்கு ஏற்பட படகுகள் இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்த பின்னரே படகு சவாரி செய்து மகிழ முடிந்தது.

அதேபோல் புதுச்சேரி கடற்கரை, மணக்குள விநாயகர் கோவில் அரவிந்தர் ஆசிரமம் ஆகியவற்றுக்கும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர்.

அதன் காரணமாக புதுச்சேரி நகரில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை உள்பட அனைத்து பிரதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை சீர்செய்தாலும் மீண்டும், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. தொடர் விடுமுறை எதிரொலி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 10 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
2. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை: தஞ்சை மாவட்டத்தில், 2 நாளில் ரூ.16¼ கோடிக்கு மது விற்பனை
தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.16¼ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
3. தமிழ்ப்புத்தாண்டையொட்டி, சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - நீராட முடியாமல் ஏமாற்றம்
தமிழ்ப்புத்தாண்டையொட்டி சுருளி அருவியில் நீராடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
4. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. மாயார் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகளுக்கு தடை
மாயார் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே ஆற்றில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.