மாவட்ட செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்இந்தோனேசியாவை சேர்ந்தவர் கைது + "||" + At Bangalore airport Rs 2 crore foreign currency confiscation Indonesian arrested

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்இந்தோனேசியாவை சேர்ந்தவர் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்இந்தோனேசியாவை சேர்ந்தவர் கைது
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்தோனேசியாவை சேர்ந்தவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் வழக்கம்போல் சுங்கத்துறை மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பயணி ஒருவரின் உடைமையில் இருந்த ஆடைகளின் நடுவே வெளிநாட்டு பணம் மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.


இதையடுத்து அந்த பையை அதிகாரிகள் கைப்பற்றி அதில் இருந்து வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். அப்போது அந்த பையில் 14 வகையான வெளிநாட்டு பணம் இருந்ததும், அதிகளவில் அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட் போன்றவை இருந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த உடைமைகளின் உரிமையாளரான இந்தோனேசியாவை சேர்ந்த 56 வயது நிரம்பியவரை அதிகாரிகள் கைது செய்த னர். அவர் பெங்களூருவில் இருந்து பாங்காக்கிற்கு விமானத்தில் பயணிக்க முயன்றதும் தெரியவந்தது.

கைதானவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டு பணம் குறித்து அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது - ரூ.28 லட்சம் வாகனங்கள் மீட்பு
பெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
2. பெங்களூரு தெற்கு தொகுதியில் அனந்தகுமார் மனைவிக்கு வாய்ப்பு மறுப்பு
பெங்களூரு தெற்கு தொகுதியில் அனந்தகுமார் மனைவிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பா.ஜனதா வேட்பாளராக 28 வயது இளைஞர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
3. பெங்களூருவில் 31-ந் தேதி நடக்கிறது: ராகுல் காந்தி, தேவேகவுடா பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் - சித்தராமையா தகவல்
ராகுல் காந்தி மற்றும் தேவேகவுடா பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பெங்களூருவில் வருகிற 31-ந் தேதி நடக்க உள்ளதாக சித்தராமையா கூறினார்.
4. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மடாதிபதி மாதே மகாதேவி மரணம் முதல்-மந்திரி குமாரசாமி இரங்கல்
பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மடாதிபதி மாதே மகாதேவி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
5. பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் பயங்கர தீவிபத்து; 300 கார்கள் எரிந்து சாம்பல்
பெங்களூருவில், சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கார்கள் எரிந்து நாசமாயின.