தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சவுகாஜ்’ ஆபரேஷன்


தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சவுகாஜ்’ ஆபரேஷன்
x
தினத்தந்தி 13 Jan 2019 11:12 PM GMT (Updated: 13 Jan 2019 11:12 PM GMT)

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடல் பகுதியில் சவுகாஜ் ஆபரேஷன் தொடங்கியது.

கன்னியாகுமரி,

கடல் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கடல் வழியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ‘சவுகாஜ்’ ஆபரேஷன் தொடங்கியது. இதில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், இந்திய கடலோர காவல் படை போலீசாரும் ஈடுபட்டனர் இதன்மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் அதிநவீன ரோந்து வாகனத்தில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்றது.

இந்த சோதனை வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது. கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 4 விசைப்படகுகளும் பழுதானதால் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் மூலம் கடலுக்கு சென்று கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story