சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை கண்டித்து அய்யப்ப பக்தர்கள் கண்டன பேரணி


சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை கண்டித்து அய்யப்ப பக்தர்கள் கண்டன பேரணி
x
தினத்தந்தி 14 Jan 2019 11:00 PM GMT (Updated: 14 Jan 2019 6:31 PM GMT)

சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை கண்டித்து அய்யன்கொல்லியில் அய்யப்ப பக்தர்களின் கண்டன சரண கோ‌ஷ பேரணி நடைபெற்றது.

பந்தலூர்,

பெண்களை அனுமதித்ததை கண்டித்து கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவில் அனைத்து வயது பெண்களை அனுமதித்ததை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல் தமிழ்நாட்டிலும் அய்யப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லியில் உள்ள அய்யப்பன், வாலாட்டு மகாவிஷ்ணு மற்றும் அம்பலமூலா அய்யப்பன், குன்றத்து குமரமுருகன் உள்ளிட்ட கோவில் களில் சபரிமலை பாதுகாப்பு குழு தொடங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை கண்டித்து சரண கோ‌ஷ பேரணி அய்யன்கொல்லியில் நேற்று நடைபெற்றது. பேரணி அம்பலமூலா குன்றத்து குமரமுருகன் கோவிலில் தொடங்கி நரிக்கொல்லி, கோழிச்சால் வழியாக அய்யன்கொல்லி பஜாரை வந்தடைந்தது பேரணியில் சபரிமலை பாதுகாப்பு குழுவினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் சபரிமலை ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்ட கேரள அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் அய்யன்கொல்லியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குழு தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். அய்யப்பன் கோவில் கமிட்டி தலைவர் சுப்பிரமணி, செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் ராமகிருஷ்ணமட பூர்ணசேவானந்தா, சேரங்கோடு சாமியார் மலை ஈஸ்வரன் கோவில் ஓம்காரநந்தா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கோவில் கமிட்டி தலைவர்கள் சுரேந்திரன், ராதாகிருஷ்ணன், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story