கொமாரபாளையத்தில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் மூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் கொமாரபாளையம் ஊராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
மோகனூர்,
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் குப்புசாமி வரவேற்றார். இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் பல்வேறு குறைகளை கேட்டு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் அம்பிகாபாண்டியன், இளைஞரணி நிர்வாகி சிவா, மாவட்ட பிரதிநிதி அன்புச்செழியன், மாப்பிள்ளை மீரா, ஈஸ்வரன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story