சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்


சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2019 9:58 PM GMT (Updated: 14 Jan 2019 9:58 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வடக்கன்குளம்,

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள ஆவரைகுளம் பாலையா மார்த்தாண்டம் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் கணேசன், பள்ளி இயக்குனர் முரளி மார்த்தாண்டம் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக ஆவரைகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாஸ்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜா, கல்விக்குழு தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் கணேசன் பரிசு வழங்கினார். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சஞ்சீவி ராஜன், தலைமை ஆசிரியை செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்.

விக்கிரமசிங்கபுரம் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனிமெட்டில்டா ஆகியோர் தலைமை தாங்கினர். ஸ்போர்ட்ஸ் செகரட்டரி லியாண்டர் ஜோசப்புக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் மாணவர்களின் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் மற்றும் உறியடி நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஸ்காட் கல்வி குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் அருண்பாபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். இதில் கல்லூரி முதல்வர் ரவிசங்கர், மேலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர் வெங்கடசுப்பிரமணியன் செய்து இருந்தார்.

பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். விழாவில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக் கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பாவூர்சத்திரம் எஸ்.எஸ். கிட்ஸ் மழலையர் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ரோட்டரி முன்னாள் துணை கவர்னர் சந்தானம் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி தேவி வரவேற்றார். ஆசிரியை முப்புடாதி பேசினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பொங்கலிடப்பட்டது. விழாவில் ஆசிரியைகள் கவிதா, ஜெயலட்சுமி, சுடர்ஒளிவு, அனிதா, குணரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஷீபா நன்றி கூறினார்.


Next Story