மாவட்ட செய்திகள்

ஹெல்மெட்டுக்குள் மறைத்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது + "||" + 2 men arrested for hashish was smuggled

ஹெல்மெட்டுக்குள் மறைத்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது

ஹெல்மெட்டுக்குள் மறைத்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது
ஹெல்மட்டுக்குள் மறைத்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு,

கொச்சி நகர மதுவிலக்குத்துறை சப்–இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையில் உதவி அதிகாரிகளான ராமபிரசாத், ஜெயன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் வந்த 2 வாலிபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.

இதையொட்டி அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை. இநத நிலையில் 2 வாலிபர்களும் தாங்கள் அணிந்து வந்த ஹெல்மெட்டை கழற்றாமல் அதிகாரிகளிடம் பேசி வந்தனர். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஹெல்மெட்டை அதிகாரிகள் கழற்றினார்கள். அதில் தலா ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கோட்டயம் ஈராட்டுப்பேட்டையை சேர்ந்த ஸஹல் (வயது 21), முகமது (22) என்று தெரிந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பேரையூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக்’ வீடியோ எடுத்த 2 பேர் கைது
சாப்டூர் போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக்’ ஆப் மூலம் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 வாலிபர்களை சாப்டூர் போலீசார் கைது செய்தனர்.
2. தென்பெண்ணை ஆற்று பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தல் வாலிபர் கைது
தென்பெண்ணை ஆற்று பகுதியில் நூதன முறையில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய வாலிபரை கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
3. நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.
4. தேவர்சோலையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் 5 பேர் கைது
தேவர்சோலையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. தொண்டி பகுதியில் கடலில் வெடிகுண்டு வீசி மீன்பிடிப்பில் ஈடுபட்டவர் கைது 46 டெட்டனேட்டர்கள்–ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
தொண்டி பகுதியில் சட்டவிரோதமாக கடலில் வெடிகுண்டுகளை வீசி மீன்பிடிப்பில் ஈடுபட்டவரை கடலோர போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து 46 டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆசிரியரின் தேர்வுகள்...