பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 18 Jan 2019 2:30 AM IST (Updated: 17 Jan 2019 8:33 PM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.

பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.

திருவிழா

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் அழகு முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 6–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் தினமும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பூக்குழி இறங்கினர்

திருவிழாவின்வின் சிகர நாளன்று அதிகாலை 5 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள முத்துமாரியம்மன், சப்த கன்னியர்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 11 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு வில்லிசை, மகுட ஆட்டம், கணில் ஆட்டம், உறுமி மேளம், இசைக்கச்சேரி ஆகியவை நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சப்பரம் கோவிலை வந்தடைந்தவுடன், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.

ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.

Next Story