திங்கள்சந்தை அருகே கல்லூரி மாணவியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


திங்கள்சந்தை அருகே கல்லூரி மாணவியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2019 10:15 PM GMT (Updated: 2019-01-22T02:48:06+05:30)

திங்கள்சந்தை அருகே கல்லூரி மாணவியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே நெல்லையார்கோணம் பகுதியை சேர்ந்தவர் சேவியர் ராஜ். இவருடைய மகள் செர்சியா (வயது 19). இவர் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று மதியம் செர்சியா காட்டுவிளை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

தங்க சங்கிலி பறிப்பு

அவர்கள் செர்சியாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த செர்சியா ‘திருடன்... திருடன்...’ என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர்கள் வேகமாக தப்பி சென்றனர்.

இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story