நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
நாகர்கோவில்,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக அவர்களுக்கு சம்பளத்தை வழங்கக்கோரியும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வம், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். இதில் ராஜேஷ், ரவி, திருமலை பெருமாள், சுந்தரம், ஆறுமுகம், சின்னத்துரை, அய்யப்பன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story