மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டை மறு கணக்கெடுப்பு செய்ய வேண்டுகோள்


மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டை மறு கணக்கெடுப்பு செய்ய வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:45 PM GMT (Updated: 22 Jan 2019 9:40 PM GMT)

மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டை மறுகணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காரைக்குடி,

மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் விஸ்வநாத கோபாலன் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

 பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் 124–வது திருத்த மசோதாவை நிறைவேற்றியதை வரவேற்கிறோம். பல ஆண்டுகள் உரிமைகள் மறுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு, ஏற்றுக்கொள்ளப்பட்ட சலுகைகளை முழுமையாகவும் முறையாகவும் வழங்க வேண்டும்.

மேலும் பட்டியலின மக்கள் சாதியக் கட்சிகளின் பிடியில் இருந்து வெளியேறி, பா.ஜ.க.வை ஆதரிக்கவும் வகையில் சிறப்பு திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டும். பட்டியல் இன மக்களுக்கான சமூக நீதித் துறையை 5 ஆண்டுகளுக்கு பிரதமரே ஏற்று நடத்த வேண்டும். பட்டியலின மக்களுக்கு என தனி பட்ஜெட் போட வேண்டும். ஒட்டு மொத்த இந்தியாவில் பட்டியலின மக்களின் வாக்கு வங்கி 20 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

பிரதமர் இதை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவும், தேர்தல் அறிக்கையிலும் வெளியிட வேண்டும். தலித் மக்களின் வாக்கு கணிசமாக பா.ஜ.கவுக்கு கிடைத்தால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். பிரதமரின் பொது சுகாதாரத் திட்டத்தின்கீழ் வீட்டிற்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு என்பது எல்லோராலும் பாராட்டப்படும் திட்டமாகும்.

ஆனால் முறையான கணக்கெடுப்பு செய்யாமலும், 40 சதவீதம் ஏழைகள் பெயரில் காப்பீடு செய்யப்படாமலும் உள்ளது. வசதிபடைத்த பலருக்கு சுகாதார அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே மறுகணக்கெடுப்பு செய்து அனைத்து சாதாரண மக்களுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story