வானவில் : புதுமைப் படைப்பு இவோ


வானவில் : புதுமைப் படைப்பு இவோ
x
தினத்தந்தி 23 Jan 2019 10:08 AM GMT (Updated: 23 Jan 2019 10:08 AM GMT)

ஸ்மார்ட்போன் ஒரு யுகப் புரட்சி என்றே கூறலாம். மின்னணு தொழில்நுட்பத்தின் காலத்தை வெல்லக்கூடிய வல்லமை படைத்த கையடக்க சாதனம்.

ஒரு ஸ்மார்ட்போனின் அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தியவர்கள், பயன்படுத்துபவர்கள் மிக மிகக் குறைவு. இருந்தாலும் ஸ்மார்ட்போனுக்கு தேவையான பிற சாதனங்களான பவர் பேங்க், ஸ்டோரேஜ் (நினைவக வசதி) மற்றும் தேவைகளுக்கு கூடுதலாக சில பொருள்களை சுமந்து செல்லத்தான் வேண்டியிருக்கிறது.

தடையற்ற, இடையூறற்ற சேவையை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அளித்தாலும், பேட்டரி தீர்ந்து போனால் ஸ்மார்ட்போன் செயல்படாது. அதற்காகத்தான் பவர் பேங்க். அதிகப்படியான செய்திகளை, வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் அதற்குத் தேவை நினைவக வசதி கொண்ட யு.எஸ்.பி. எனப்படும் மெமரி கார்டு.

பல சமயங்களில் போனை வைத்த இடம் தெரியாமல் தேடி, பிறகு நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ நமது தொலைபேசி எண்ணுக்கு போன் போடச் செய்து, அதிலிருந்து வரும் அழைப்பு மணி ஓசையைக் கேட்ட பிறகு போனைக் கண்டுபிடிக்கும் நிலைமை உருவாகும்.

பல சமயங்களில் அலுவலக மீட்டிங்கில் இருக்கும்போது சைலண்ட் மோடில் போட்டிருந்தால், அதை கை தவறுதலாக வைத்துவிட்டால், மற்றவர்கள் செல்போனிலிருந்து அழைப்பு கொடுத்தாலும், போன் சைலன்ட்டாக இருந்துவிடும்.

இதுபோன்ற சிரமங்களிலிருந்து உங்களை விடுவிக்க வந்துள்ளதுதான் இவோ. ஸ்மார்ட்போனின் நுட்பத்துக்கு ஓரளவு ஈடுகொடுக்கும் வகையில் வந்துள்ள இதன் விலை 69 டாலர் ஆகும்.

Next Story