வானவில் : கிருமிகளை அழிக்கும் ‘சர்பேஸ் ஸ்கின்ஸ்’
நோய்கள் தீர்க்கும் இடங்களான மருத்துவமனைகளே பல நேரங்களில் நோய்கள் உற்பத்தி செய்யும் இடமாகவும் மாறிவிடுகின்றன.
தொற்றுக் கிருமிகள் அதிகம் பரவுவதில் முக்கியமான இடம் மருத்துவமனைகளுக்கே உண்டு. பிரிட்டன் நாட்டை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் ஏழு ஆண்டு கால ஆய்வுக்கு பின்னர் இதற்கான தீர்வை கண்டுபிடித்துள்ளனர்.
‘சர்பேஸ் ஸ்கின்ஸ்’ என்ற இந்த துணியை மருத்துவமனையின் அனைத்து கதவுகளிலும் ஒட்டி வைத்து விட்டால் போதும். கதவு ஒவ்வொரு முறை திறக்கும் போதும் இந்த துணி ஒரு ஜெல் போன்ற திரவத்தை வெளியிடும்.
அந்த திரவம் தானாகவே கதவில் ஒட்டியிருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகளை அடியோடு அழித்துவிடும். கதவைத் தண்டி எந்த கிருமியும் உள்ளே நுழைய முடியாது.
இந்த முறையில் கிருமிகள் 90 சதவீதம் அழிக்கப்படுவதாக நிரூபித்து காட்டியுள்ளனர். ஏழு நாட்களுக்கு ஒரு முறை அதாவது ஆயிரம் முறை உபயோகித்த பின்னர் இவற்றை மாற்றினால் போதுமானது.
மிகக் குறைந்த பொருட்செலவில் தரமான சுகாதாரத்தை அளிக்க முடியும் எனவும் கூறுகின்றனர். இந்த எளிய முறையில் உள்ளே இருக்கும் நோயாளிகளுக்கும் வெளியே இருந்து வரும் பார்வையாளர்களுக்கும் என இருவழியிலும் நோய்த் தொற்று ஏற்படுவதை தடை செய்கிறது சர்பேஸ் ஸ்கின்ஸ்.
Related Tags :
Next Story