பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்


பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
x
தினத்தந்தி 25 Jan 2019 3:45 AM IST (Updated: 24 Jan 2019 8:30 PM IST)
t-max-icont-min-icon

பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.

நாகர்கோவில்,

முதல் தலைமுறையை சேர்ந்த படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் குமரி மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு ரூ.2 கோடியே 60 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எனவே மானியம் பெற்று தொழில் தொடங்க விரும்பும் முதல் தலைமுறை படித்த இளைஞர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 25 சதவீதம் மானியத்துடன் கூடிய இத்திட்டத்தின் மூலம் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடிக்கு மிகாமல் புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்கலாம். மகளிருக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

எனவே புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் தொழில் கல்வி (குறைந்த பட்சம் 6 மாத கால படிப்பு) படித்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினராக இருந்தால் 21 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருத்தல் அவசியம். அதுவே சிறப்பு பிரிவினர் (பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்) எனில் 21 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story