மனைவியை சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் கைது


மனைவியை சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 3:45 AM IST (Updated: 25 Jan 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை சேர்த்து வைக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 35). இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம் இளநகரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் பாபு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு முற்றிய நிலையில் பாபுவின் மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பாபு நேற்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அலுகலகத்தின் முன்பு நின்று கொண்டு, தான் எடுத்து வந்த பெயிண்டு தின்னரை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்ததும் அங்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story