சம்பா பயிரை காப்பாற்ற தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
சம்பா பயிரை காப்பாற்ற தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் சேது பாவாசத்திரம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியை கைவிட்டனர். இந்த ஆண்டு மேட்டூர் அணை பல முறை நிரம்பியதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.
ஆனால் மேட்டூர் அணையில் இருந்து முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் சம்பா சாகுபடியை பாதியிலேயே கைவிட்டனர். இதனால் இந்த ஆண்டு 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி நடைபெற்று உள்ளது. இந்த பயிர்களும் தற்போது தண்ணீர் கிடைக் காமல் கருக தொடங்கி உள்ளன.
ருத்திரசிந்தாமணி ஊராட்சி வெள்ளாழங்காட்டில் 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து கடைமடை பாசனத்துக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி அப்பகுதி விவசாயிகள் ரெட்டவயல் கடைவீதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள், பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதிவரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக பேராவூரணி- ரெட்டவயல் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story