3-வது நாளாக வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,110 பேர் கைது
3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,110 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 22-ந் தேதி தொடங்கியது.
அன்றைய தினம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 23-ந் தேதி தாலுகா அளவில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். 3-வது நாளான நேற்று மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை அருகில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலை 9 மணியில் இருந்தே குவிய தொடங்கினர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபகேஷன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் இடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் போலீசார் 638 பெண்கள் உள்பட 1,110 பேரை கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அரியலூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Related Tags :
Next Story