பெரம்பலூர் பாலக்கரையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சாலை மறியல் 1,150 பேர் கைது
பெரம்பலூர் பாலக்கரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 1,150 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதியை களைய வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 3,500 தொடக்கப் பள்ளிகளை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்று பெரம்பலூர் பாலக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 36 சங்கங்களை சேர்ந்த 600 பெண்கள் உள்பட 1,150 பேரை போலீசார் கைது செய்து பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு தங்க வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பாலக்கரை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story