மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
சமயபுரம்,
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா.அய்யம்பாளையம் பண்டுகாரன்கொட்டம் என்ற பகுதிக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை சா.அய்யம்பாளையம் மெயின்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கையை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன்பேரில், சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக, அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story