தெற்கு ரெயில்வேயின் வருவாய் அதிகரிப்பு குடியரசு தின நிகழ்ச்சியில் பொது மேலாளர் தகவல்
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தெற்கு ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளதாக குடியரசு தின நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்தார்.
சென்னை,
குடியரசு தின விழாவில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைத்து பார்க்க வேண்டும். இந்திய விடுதலைக்காக அவர்கள் செய்த தியாகத்தை நினைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டும். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்கள், குழந்தைகளுக்கு தேசப்பற்று வளர வேண்டும். தெற்கு ரெயில்வே கடந்த ஆண்டை விட 9.35 சதவீதம் அதிக வருமானம் ஈட்டியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக புதிய 54 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 8 புதிய ரெயில்கள் கடந்த 2018-ம் ஆண்டு இயக்கப்பட்டுள்ளது. இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகளில் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 89 கிலோ மீட்டர் ரெயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி பிரேந்திரகுமார், தெற்கு ரெயில்வே துறைத் தலைவர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைப்போல் சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி தலைமை தாங்கி கொடி ஏற்றிவைத்தார். சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்) நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் முதன்மை தலைமை எலக்ட்ரிக்கல் என்ஜினியர் என்.கே.குப்தா கொடி ஏற்றிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டில் ஐ.சி.எப். 2 ஆயிரத்து 340 பெட்டிகள் தயாரித்துள்ளது. இதில் கடந்த ஆண்டு தயாரித்த ‘ரெயில் 18’ 180 கி.மீ வேகத்தை சோதனை ஓட்டத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ஐ.சி.எப். புறநகர் ரெயில் பெட்டிகள், சொகுசு ரெயில் பெட்டிகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 230 பெட்டிகள் தயாரிக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஐ.சி.எப். பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீர சாகசங்கள் செய்தனர்.
Related Tags :
Next Story